Sunday, December 20, 2009

                          தமிழர் அல்லாதோர் கணக்கெடுப்பு வேண்டும். 

       இந்திய நாட்டுக்குள்ளே தமிழர்களின் மொழி , கலாச்சாரம் , அடையாளம் , தன்மை ஆகிய 

வற்றை பேணிப் பாதுகாக்க உள்ள உரிமைகளை முன்னெடுத்துச் செல்வது இந்து தமிழர் 

இயக்கம். நான் அதன் தலைவர்.

        இயக்கத்தின்படி இந்து என்ற சொல்லுக்கு அது ஒரு வாழ்க்கை முறை.    கிருத்துவ , 

இஸ்லாமிய, யூத , பார்சி மதங்கள் மடடுமல்லாது இந்தியாவில் தோன்றிய புத்த , ஜைன , 

சீக்கிய மதங்களும் செயல் படுவதை அங்கீகரிக்கிறது . இது உச்ச நீதிமன்ற பல தீர்ப்புகளில் 

விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானிக்க பட்டிருக்கிறது. 

தமிழை தாய் மொழியாக கொண்டோர் தமிழர் .   தமிழ் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்க பட்டிருக்கிறது.  தவிரவும், 1956 இல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டம் வந்த பிறகு தமிழகத்தில் வசிக்கிற எல்லோரும் , அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிரா விட்டாலும் கூட , தங்களை தமிழர்கள் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அதாவது மறைமுகமாக தாங்கள் வாழுகிற அல்லது வாழ தேர்ந்தெடுத்துக் கொண்ட  இந்த மாநில மொழியான தமிழை பேணி பாதுகாக்க அவர்களுக்கு இருக்கும் தார்மிக கடமையை ஒப்புக்கொண்டார்கள். 
தமிழின் மேம்பாட்டிற்கு இவர்களின் பங்களிப்பு , தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை விட சில நேரங்களில் அதிகம். 

  இந்து என்ற சொல்  இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக் கானவர்களின் மனங்களில் கடவுள் , மதம் போன்றவை பற்றி கொண்டிருக்கும் பொருளோடு பிரிக்க முடியாத படி இணைந்துவிட்ட ஒன்று. 

கேரளாவில் இருந்து மலையாளிகள் ; ஆந்திராவில் இருந்து தெலுங்கர்கள் ; கர்நாடகாவில் இருந்து கன்னடியர்கள்; மகாராஷ்ட்ராவில் இருந்து மராட்டியர்கள் ; வங்கத்தில் இருந்து வங்காளிகள் ; குஜராத்தில் இருந்து சொவ்ரஷ்ட்ரர்கள்;உருது பேசும் முஸ்லிம்கள் ; மற்றும் ராஜஸ்தான் , ம.பி., ; வு.பி, பீகார் மாநிலங்களில் இருந்து இந்தி பேசும் மக்கள் அனைவரும் இதுநாள் வரை தமிழை தாய் மொழியாக கொண்டிருப்பவர்களுடன் சுமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது எண்ணிக்கை தொடக்கத்தில் ஐந்து முதல் பத்து ஆக இருந்து தற்போது  பதினைந்து முதல் முப்பத்தைந்து சதமாக உயர்ந்து கொண்டே போகிறது. முக்கியமாக இவர்கள் தான் தமிழ் பின்னணியை கொண்டவர்களை விட செல்வத்திலும், படிப்பிலும்., சமுதாய ரீதியிலும் , ஏன் அரசியல்ரீதியிலும் கூட வலு உள்ளவர்களாக விளங்குகிறார்கள். 

இந்தியா என்பது பல மொழிகள் , மதங்கள், இனங்கள், குறிப்பிட்ட பிரதேச குணங்களை எல்லாம் பின்னி பிணைந்து விளங்கும் ஒரு தேசம்.  அதன் அரசியல் சட்டம் மத்திய மற்றும் சமழ்டி முறையை கொண்டது. அரசியல் சட்ட பிரிவு பத்தொன்பது  அதன் குடிமக்களுக்கு நாடு முழுவதும் சுற்றி வரவும் இந்தியா நிலப் பகுதி எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் குடியேறவும் , எந்த தொழிலை , வணிகத்தை , வேலையை மேற்கொள்ளவும் உரிமை வழங்குகிறது. 

அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின் பிரிவு இருபத்துஒன்பது , சிறுபான்மையர் நலன் காத்தல் என்ற தலைப்பில் தன் நிலபரப்பில் வாழும் குடிமக்களுக்கு அவர்கள் தங்களது தனித்துவமான மொழி , எழுத்து, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது. 
இந்திய மக்கள் தொகையில் ஆறு.புள்ளி ஐந்து சதமானமே இருக்கும் தமிழர்கள் சிறுபான்மையர் ஆவர். அவர்களுக்கு தங்கள் தனித்துவ மொழி , எழுத்து, கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொள்ள  உரிமை உள்ளது. இந்த அரசியல் சட்ட உரிமைக்குத்தான் இப்போது ஆபத்து. 

இந்திய மக்களை பிணைக்கிற , இந்திய அரசியல் சட்டத்தின் அடித்தள கொள்கையாக விளங்குவது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பொன்னான கொள்கை. அது குறிப்பாக தீர்க்கமாக வலியுறுத்துவது ' வேற்றுமை ' என்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைத்தான்.

வேறுவகையில் பொருள் கொண்டால் பன்முக தன்மை கொண்ட வேற்றுமைகளை பாதுகாக்கவிட்டால்  ஒற்றுமை இருக்காது என்பதுதான்.  நமது அரசியல் சட்டம் பல்வேறு குணங்களையும் மொழிகளையும் கலாச்சாரங்களையும் பலி கொடுத்தாவது ஒற்றுமையை 
காக்க வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை. இரண்டும் இணைந்தே வாழ முடியும் என்பது தான் இந்தியாவின் தனி சிறப்பு மிக்க பாரம்பரியம்.

ஒன்றைதாழ்த்தி மற்றொன்றை உயர்த்த விழைகிறவர்கள் உண்மையில் இந்தியாவின் வெற்றிகரமான வேற்றுமையில் ஓற்றுமை என்ற கொள்கைக்கு ஊறு விளைவிக்கிரவர்கள்.
 தமிழர்களுக்கு மற்றவர்களோடு  ஒத்து போவதிலும் விட்டு கொடுப்பதிலும் எந்த காலத்திலும் பிரச்னை வந்ததில்லை. மற்ற உயிர் இனங்களோடு இணைந்து வாழ்வது அவர்களது உடன் பிறந்த பண்பாடு. தமிழர் கலாச்சாரத்தை இரண்டே வரிகளில் விளக்கலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
துரதிருஷ்டமாக எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதின் காரணமாக இன்று தமிழ் மொழியும் கலாச்சாரமும் பிழைத்திருபதே கேள்விக் குறியாக மாறிவிட்டது. எல்லா மொழிக் குழுக்களையும் போலவே தமிழர்களும் சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறார்கள்.தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்கிற நிலையில் அவர்கள் இல்லை. பாதுகாக்க வேண்டிய தனித் தன்மை வாய்ந்த கலாச்சாரம் தமிழர்களுக்கு இல்லை என்று கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரத்தை கண்டு மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கத்தான் அவர்களால் முடிகிறது.
அவர்களது  மொழியின் தனித் தன்மை அதை  அழிக்கும் நோக்கோடு திட்டமிட்டு சிதைத்து பயன்படுத்தப் படுகிறது .   சதியோ இயற்கையோ தமிழ் தன் இயற்கை வடிவத்தை இழந்து  வருகிறது. .   கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசு தமிழ் மொழி பாதுகாப்புக்கு அர்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் கூட பல சூழ் நிலைகளால் அதை முழுமையாக நிறை வேற்ற முடியாத நிலைமை உள்ளது.

மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைந்த பிறகு மாநில அடையாளங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது.   மகாராஷ்ட்ராவில் அனுபவம் நம் கண்களை திறக்க வேண்டும். மும்பையில் மராட்டியர் அல்லாதவர் 50லட்சத்தை தாண்டிய பிறகு இந்தியை ஆட்சி மொழியாக்க கோரிக்கை எழுந்தது. மேம்போக்காக பார்க்கும்போது அது நியாயம்தான். அனால் மராத்தி ஒதுக்கம்படும் சூழ்நிலை வந்தபோது இந்தியை அனுமதிக்கும் முடிவு ஒத்தி வைக்கபட்டிருக்கிறது.

தவறான மொழிக்கொள்கை மன வருத்தங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கிறது. உதாரனமாக நேருவின் பாராளுமன்ற உறுதிமொழி , அதாவது, " இந்தி பேசாதவர்கள் விரும்பும் வரை ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் நீடிக்கும் " என்ற உறுதிமொழி, அமுல்படுத்தப் பட்டு வந்தாலும்   அதற்கு சட்ட பின்புலம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு பிரிவு 344(௧) மற்றும் 351
படி எட்டாவது பட்டியலில் கண்ட பதினைந்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழி ஆக்குவது தான் .

தமிழகத்தில் தமிழை வாழ்க்கையின் பல தடங்களில் பயன் படுத்த முடியவில்லை. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட அரசு ஊக்கதுகை கொடுக்க வேண்டியுள்ளது. வணிக நிறுவனங்கள் அரசு அதிகாரிகளின் தாக்கீதுக்குப் பிறகும் தமிழில் பிரதானமாக பலகைகளையும் அடையாளங்களையும் வைக்க தவறுகிறார்கள் .   தமிழகத்தில் தொடக்க கல்விகூட கட்டாயமாக இல்லை. சமீபத்தில் ஒரு சம்பவம்.  சென்னைக்கு அருகே ஒரு ரயில்வே நிலையத்தில் ஒரு வடநாட்டு வூழியர் தமிழ் விண்ணப்பதை வாங்க மறுத்திருக்கிறார்.   எதிர்ப்பு  தெரிவித்து  உள்ளூர் மக்கள் போராட வேண்டிய தாகி விட்டது. மக்களை இந்தியாவில் எந்த இடத்திலும் குடியேற முடியாமல் தடுப்பது முடியாது என்பதும் உண்மைதான்.    தமிழர்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குடியேறி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அந்தந்த மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இல்லாத படிக்கு கட்டுக்குள் இருக்கும்வரை பிரச்னை ஏதுமில்லை. அந்தந்த மொழிகளின் , பண்பாட்டின் , வருவாய் ஈட்டும் சக்திக்கு அபாயம் ஏற்படுத்தினால் பல பிரச்னைகள் தோன்றத்தான் செய்யும் .

அதே போல தமிழர் அல்லாதோர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ் தவிர பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் எண்ணிக்கை பற்றி முரண்பாடான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.   சிலர் தாங்கள் மாநிலத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் என்கிறார்கள். தமிழ் மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. இங்கு வாழ்பவர்களின் தாய் மொழி பற்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் இந்த முரண்பாடான தகவல்கள் முடிவுக்கு வரும். அரசியல்  சட்டத்தின் 19இ பிரிவை பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமையை அனுமதிக்கும் அதே நேரத்தில் பிரிவு 29ஒன்றின் படி தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள அனுமதிப்பது எப்படி என்பதுதான் முக்கிய கேள்வி. இதில்  சட்டத்தின் பாது காவலர்களாக விளங்கும் மத்திய மாநில அரசுகள்தான் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும்.

இதை தடுக்க முடியாமல் போனால் சட்ட ஒழுங்கு கெட்டு கலவர சூழ் நிலை உருவாகலாம்.  சில மாநிலங்களில் விவசாயிகள் அல்லாதோர் வேற்று மாநிலத்தோர் விவசாய நிலங்களை உடைமைகளாக வைத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சிலவற்றில் வட மாநிலங்களை சேர்ந்த சிலர் ஐநூறு ஆயிரம் என்று தரிசு நிலங்களை வாங்கி அவற்றை வங்கி அதிகாரிகளின் துணை கொண்டு ஈடு வைத்து பெரும் தொகைகளை கடன் வாங்கி இருக்கிறர்களாம்.

எவர் மீதும் நமக்கு விரோதமில்லை. நமக்கு தமிழ் நாட்டில் அதிக எண்ணிகையில் குடியேறிவரும் தமிழர் அல்லாதோர் காரணமாக தொன்மை மொழிக்கும் கலாச்சாரதிற்கும் அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருந்தால் சரிதான். இது வரைக்கும் பரவாஇல்லை .   எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் இந்த மனுவிற்கு அடிப்படை.

இலங்கையில் தமிழர்கள்  லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  இன்னமும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தமிழர்கள் இந்த கொடிய இனப் படுகொலைகளை சிங்களர்கள் ரத்த தாகத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக  நிகழ்த்தியபோது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

அந்தக் கொடிய குற்றங்களை நிகழ்த்திய பிறகும்கூட பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதைக் கூட பேச தயாராக இல்லாமல் தமிழ் நாட்டிலிருந்து ஆதரவுக் குரல் எழுவதை எப்படி கட்டுப் படுத்துவது என்றுதான் திட்ட மிடுகிறார்கள். கணக்கெடுப்புத் துறை எதைப் பற்றியும் கவலையில்லாமல் இருப்பதுடன் மாநிலங்களுக்கு இடையே நிகழும் மக்கள் நடமாட்டத்தைப் பற்றி எந்த கணக்கும் அவர்கள் எடுப்பதில்லை. இதைப் போன்ற கட்டுப் படுத்தப் படாத கண்காணிக்கப் படாத இட மாற்றங்கள்தான் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

அடிப்படை உரிமை ஒன்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத முழு உரிமைகள் அல்ல. அதைப் போலவே குடியேற்ற உரிமையும் கூட நியாயமான கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டவைதான்.அந்த கட்டுபாடுகள் என்ன என்பதையும் எப்படி அமுல்படுத்துவது என்பதையும் அரசும் அதிகாரிகளும்தான் தீர்மானிக்க வேண்டும்.எனக்கு நீதிமன்றத்திற்கு வருவதை தவிர வேறு வழியில்லை.

எனவே நீதிமன்றம் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கள் எத்தனை சதம் பேர்
தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு அமைப்பை அமைக்கும் படியும் அல்லது மேற்கண்ட காரியத்திற்காக எதிர்வரும் மக்கட் தொகை கணக்கெடுப்பின்போது அத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ளும்படி கணக்கெடுப்பு அமைச்சகத்தை அறிவுறுத்தியும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான  குடியேற்ற உரிமைகளுக்கு என்ன விதமான நியாய கட்டுபாடுகளை விதித்து அந்தந்த மாநில, குறிப்பாக தமிழ் மாநில மொழியான,தமிழ் மொழி , கலாச்சாரம் ,எழுத்து , அடையாளம் இவற்றை பாதுகாப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளை வகுத்து அமுல்படுத்தும் படியும் உத்தரவிட கேட்டுக் கொள்கிறேன்.


    ( சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்து தமிழர் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர்
    வி. வைத்தியலிங்கம் ஆகிய நான் தாக்கல் செய்திருக்கும் மனுவின் சாரம். )

    Monday, December 7, 2009

    தமிழர்களுக்கு தேசியம் போதும். தேசிய கட்சிகள் வேண்டாம்.

    தேசிய கட்சிகள் என்பன இன்னமும் பெரும்பாலும் வட மாநில குறிப்பாக இந்தி பேசும் மாநில தலைவர்களின் ஆதிக்கத்தில்தான் இயங்கி வருகின்றன.
    மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை அவை எந்த அளவு மதித்து நடக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
    மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதுவும் கானல் நீராகவே நீடிக்கிறது.
    இன்று எந்த தேசிய கட்சி நாங்கள் முழுமையாக மாநில உணர்வுகளை மதித்து நடக்கிறோம் என்று மார் தட்டி சொல்ல முடியும்?
    அப்படி நடக்க முற்பட்டால் தேசியம் அழிந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
    மாநில உணர்வுகளை நசுக்குவதாலேயே தேசியத்தை வாழ வைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
    ஒரு தலைவர் நான் மேடையில் இருக்கும்போதே பேசினார்.
    " இட்டிலியும் தோசையும் நான் வடிவிழக்க மாட்டேன் என்று நினைத்தால் நாம் உயிர் வாழ முடியுமா? "
    ஆக இவர்களுக்கு மாநில உணர்வுகள் என்பன வடிவிழந்து சிதைந்து தேசியம் என்ற உடலை வாழ வைக்க வேண்டிய உணவுகள் .
    இவர்களால் தேசியத்தையும் நிலைக்க வைக்க முடியாது. மாநில உணர்வுகளை காக்கவும் முடியாது.
    இவர்கள்தான் தேசியத்தின் எதிரிகள்.
    பன்மையில் ஒருமைத்தன்மை என்பதை ( Unity in diversity ) தவறாக புரிந்து கொண்டிருப்பவர்கள்.
    பன்மையை ஒப்புக்கொள்ளாமல் ஒற்றுமை என்பது இருக்க முடியாது என்பதை மறந்தவர்கள்.
    பாரதத்தாய் மட்டுமே ஏற்றுகொள்ள தக்கது மற்ற வங்காளி, மராட்டிய , தெலுங்கு, கன்னட, பஞ்சாபி, மலையாள,தமிழ்த் தாய்களை ஏற்று கொள்ள மாட்டோம் என்று அறிவித்துவிட்டு தேசியத்தை காக்கமுடியும் என்று எப்படி அவர்கள் நம்புகிறார்கள்?
    பாரத தாயின் மகள்களாக ஏனைய மாநில தாய்கள் இருக்க முடியுமே?
    இரக்கமே இல்லாமல் இலங்கையில் ஒரு விடுதலை போராட்டத்தை தற்காலிகமாக முடக்கியதில் , ஒரு மாபெரும் மனித பேரவலத்தை நடத்தி முடித்ததில் , தமிழர்களை கொன்று ஒழித்ததில் , இந்தியம் வெற்றி பெற்றிருக்கிறது.
    ஒரே ஒரு திருப்தி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்தியா இன்னமும் ஜனநாயக நாடாக நீடிக்கிறது.
    பாராளுமன்றத்தில் நாம் நமது குறைகளை பேச முடியும். இந்த அவைதான் பாரத ஒற்றுமையை கட்டி காத்து வருகிறது.
    அமைச்சர்கள் மாநில மொழிகளில் பேச முடியாது என்று இருக்கும் நிலை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் சரி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
    இன்றைய நிலையில் தேசிய கட்சிகள் என்பன மாநில மக்களின் மனசாட்சியை விட்டு வெகு தூரம் விலகியே நிற்கின்றன.
    எனவே நாமும் அவைகளை விட்டு விலகி நிற்பதில் தவறில்லை.
    தமிழர்களுக்கு தேசியம் போதும். தேசிய கட்சிகள் தேவை இல்லை.
    முதலில் தமிழ் தமிழர் உணர்வுகள் பற்றி பேசுபவர்கள் தேசிய கட்சிகளை விட்டு வெளியேற வேண்டும்.
    நம்மில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
    தி.மு.க. - ஆ தி. மு. க. - பா. ம. க. - தே. மு, தி. க. - ம.தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள்- புதிய தமிழகம்., என்று பல்வேறு கட்சிகள் இயங்கி வருகின்றன.
    எல்லார் மீதும் ஏதாவது குறை இருக்கலாம். குறைகளே இல்லாத கட்சி என்று ஏதுமில்லை.
    குற்றங்களோடு மாற்றாரை ஏற்பதற்கு பதில் குறைகளோடு நம்மவர்களை ஏற்போமே . ஏனெனில் அவர்கள் நம்மவர்கள். .
    நம்மவர்களை திருத்துவோமே. தேசியவாதிகள் திருந்தும்வரை.
    தமிழர்களே, தேசிய கட்சிகளை விட்டு வெளியேறுங்கள். - இதுதான் இன்றைக்கு தேவையான முழக்கம்.
    நாளை இதே முழக்கத்தை மற்ற மாநிலங்களிலும் கேட்க முடியும்.
    தமிழர்களுக்கு,, தேசியம் போதும். தேசிய கட்சிகள் வேண்டாம்.

    Thursday, November 5, 2009

    ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா



    நமது நாட்டின் பெயரை ,இந்தியா என்கிற பாரதம் என்று அழைக்கிறது நமது அரசியல சட்டம் .

    அது மட்டுமல்ல . அது பல மாநிலங்களின் மைய அரசாகவும் விளங்கும் என்றும் ( shall be a Union of States ) என்றும் அது விளக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம்
    பிரிவு ஒன்று அரசின் பெயரையும் தன்மையையும் மேற்கண்டவாறு விவரிக்கிறது.

    இந்தியாஅதாவது பாரதம்
    பல்வேறு மாநிலங்களின் மைய அரசாக விளங்கும் என்பது சரியானால் அதன் பெயர் ஐக்கிய இந்திய நாடுகள் என்றுதானே இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் சுருக்கமாக இந்தியா அல்லது பாரதம் என்று சௌகரியதுக் காகஅழைக்கப்படுகிறது.

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி போராட்டம் எழும் போதெல்லாம் நமது அரசியல சட்டம் மத்திய அரசை மையமாக கொண்ட மய்யத்தன்மை கொண்டதா அல்லது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் சமஷ்டி தன்மை கொண்டதா என்ற கேள்வி எழுவது வழக்கம். Whether it is Unitary or Federal is yet to be finally decided.

    இந்தியாவில் ஒருமைத்தன்மை நிலைத்துவிட்டது. யாருக்கும் பிரிந்து போகும் மனநிலை இல்லை. பிரிவினை தடை சட்டம் இருப்பது உண்மைதான். ஆனால் பிரிவினை கோரிக்கை எழாமல் இருப்பதற்கு சட்டம் மட்டுமே காரணம் இல்லை. சௌகரியம்தான் காரணம்.யாரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் தொழில் செய்யலாம் என்று அரசியல சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமை தனிச்சிறப்பு.

    இந்த ஒருமைத்தன்மைக்கு இரண்டு அம்சங்கள் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஒன்று மாநிலங்களின் தனித் தன்மையை பாதிக்கும் அளவிற்கு மாநிலங்களுக்கு இடையே யான மக்கள் தொகை பரிவர்த்தனை . இரண்டு மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரக் குவியல். மாநில சுயாட்சி கோரிக்கை அவ்வப்போது எழுவது மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படும்போது. அதற்கு நாட்டின் பெயர் கூட ஒரு காரணம்.

    இந்தியா என்ற பெயரில் தனித் தன்மை கொண்ட மாநிலங்கள் இருப்பது மறைக்கப்படுகிறது. மாறாக ஐக்கிய இந்திய நாடுகள் என்னும்போது மாநிலங்களின் தனித் தன்மை வெளிப்படையாக தெரிகிறது.

    மேலாகப் பார்க்கும்போது இது இந்திய ஒற்றுமைக்கு எதிரான கருத்து போலத்தான் தோன்றும்.
    உண்மையில் இது இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் சிந்தனைதான்.

    அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை கொண்டவைகளாக விளங்கினாலும் இதுவரை யாரும் பிரிவினை பற்றி சிந்தித்ததே இல்லை. அதுதான் உண்மையான தேசியம்.

    பெயரில் என்ன இருக்கிறது என்போருக்கு சொல்கிறேன். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.

    எனவே ஐக்கிய இந்திய நாடுகள் என்ற பெயர்தான் சரி. அப்போதுதான் விழிப்புணர்வு பெருகும். தன்னம்பிக்கை பிறக்கும். ஒற்றுமை நிலைக்கும்.


    Sunday, October 25, 2009

    தன்மானம் இந்துவுக்கு வேண்டாமா?

    1939 இல் நடந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் அரிஜன ஆலயப் பிரவேசம்பெரிதாக பேசப்பட்டு இன்றளவும் சாதனையாக எடுத்துக் காட்டப்படுகிறது.

    ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் போராட வேண்டியகட்டாயத்தில்தான் தலித் சமுதாயம் இருக்கிறது.

    அப்போது ஆனந்த விகடன் எழுதியது , " சுவாமி இருக்கிறாரா? . கடவுள்எல்லையற்ற கருனையுடையவர். . கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் , என்று நாம்நம்புகிரோம . ஆனால் மதுரை வைதீக கோஷ்டி தலைவர்களோ , கடவுள்ஹரிஜனங்களை வெறுக்கிறார். அவர்கள் கிட்ட வந்தால் கடவுளின் சக்திபோய்விடுகிறது." என்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக பொது ஜனங்கள் அப்படிக்கருத வில்லை. மதுரை கோவிலில் சுவாமியும் அம்மனும் இருப்பதாகவே நம்பித்திரளான ஜனங்கள் கோவிலுக்குப் போகிறார்கள் ."

    நாகப்பட்டினம் மாவட்டம் செட்டிபுலம் கிராமத்தில் காமாட்சியம்மன்
    கோவில்
    நுழைவு போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் நடத்தி தோல்வி கண்டபின்
    மீண்டும் அதே முயற்சியை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவம்பர் இரண்டாம்
    தேதி தொடர தீர்மானித் திருக்கிறார்கள் .

    நடப்பது ஆன்மிக நாட்டமா? சாதிச்சண்டையா?

    கோவில்கள் பக்தி தவிர
    இதர எல்லா நோக்கங்களுக்கும் பயன் படுகின்றன.
    இங்கு மார்க்சிஸ்டுகள் தங்கள் வோட்டு வங்கியை பாது காத்துக்கொள்ள ஆலயநுழைவு போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    தலித்துகளுக்கு எதிராக வன்னியர் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டு எதிர்கிறார்கள்.

    உலகத்திலேயே சொந்த மக்களையே அந்நியப்படுத்தும் மதம் / நம்பிக்கைஇந்துவாகத் தானிருக்கும்.

    நாத்திகன் கோவிலை பார்த்தால் இதை வைத்து எத்தனை பிராமணன் பிழைப்புநடத்திக் கொண்டிருகிறான் என்று கணக்கு தேடுவான்
    .

    அரசியல்வாதி கோவிலை சுற்றி வருவது இதில் என்ன கிடைக்கும் என்று ஆழம்பார்க்க . தர்ம கர்த்தா ஆகி பணம் பார்பதா அல்லது சிபாரிசு வைத்து டெண்டர்வேலை வாங்கி சம்பாதிப்பதா என்ற சிந்தனை .

    திருடன் எங்கே சிலை கிடைக்கும் என்று அலைகிறான்.அவனும் பக்தி வேடம்போட்டு கோவிலுக்குள் அமர்ந்திருப்பான்.

    பணம் படைத்தவன் அர்ச்சனை செய்கிரவருக்கும் நிர்வாகத்தில்இருக்கிரவருக்கும் லஞ்சம் கொடுத்து சாமியை குறுக்கு வழியில் தரிசனம் செய்துவேண்டுகோள் வைப்பது மட்டுமின்றி அதற்கு சாமியையும் கூட்டாளிஆக்கிகொள்வான்.

    செட்டிபுலத்திலும் பிற கிராமங்களிலும் வாழும் இந்துக்கள் சுவாமியை பற்றிஎன்னதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த சுவாமி பாகுபாடுஅநியாயங்களை கண்டிக்காத சுவாமி , அதற்கு சக்தியில்லாத சுவாமிஎன்பதுதானே. இதைவிட சுவாமியை எப்படி அவமதிப்பது என்றோகேவலப்படுத்துவது என்றோ எனக்குத் தெரியவில்லை.

    ஆக, நடப்பது சாதிச்சண்டைதானே தவிர சாமிச்சண்டையில்லை.

    சாமியிடம் பேரம் பேசுவதை விட வேறு என்ன அக்கிரமம் இருக்க முடியும்?

    " கல்லில் மட்டும்தான் சாமி இருக்கிறார் என்று விபரம் தெரிந்த யாரும் நம்பமாட்டர்கள். " என்று மறைந்த காஞ்சி பெரியவர் சொல்லி இருக்கிறார் என்றால்யார் நம்ப போகிறார்கள்?

    சாமி , நம்பிக்கை இதன் இலக்கணங்களை எல்லாம் பக்தர்கள் தான் , கோவில்களை நிர்வகிப்பவர்கள் தான் உடைத்து தூளாக்கி கொண்டிருக்கிறார்கள்

    . பாமரன் பக்தி செய்பவனாக இருந்தாலாவது இந்த தவறுகளை மன்னிக்கலாம். படித்தவனும் பண்டிதனும் இதே தவறை செய்வதை எப்படி மன்னிப்பது?

    பக்தி செய்பவனுக்கு தன்மானம் தேவை இல்லை நம்பிக்கை மட்டுமே போதும்என்பதுதான் இன்றைய பக்தி இலக்கணம்.

    எந்த சீர்திருத்தத்தை பக்தன் முன்னெடுதிருக்கிறான்?
    நம்பிக்கை என்று நேற்று இருந்தது எல்லாம் என்று மறைந்து போனதற்குநாத்திகனும் சிந்தனையாளனும் தானே காரணம்.

    பக்தர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்யஇதுவே தருணம்.

    நம்பிக்கையின் பேரால் அடிமைத்தனத்தை சகித்துக்கொள்ளும் மடமைஒழியட்டும். இறைவன் எல்லா மனிதரையும் மொழிகளையும் படைத்தவன்என்பதால் அவனுக்கு பாரபட்சம் இருக்க முடியாது என்பதை நம்புவோம்.

    எனவே எல்லா மனிதரும் எல்லா மொழிகளாலும் இறைவனை அர்ச்சிப்பதே
    உண்மையான வழிபாடு என்பதை உணருவோம்.

    அந்த உணர்வு வரும் வரை இந்து என்று சொல்லிகொள்வதில் ஒரு மரியாதையும்இல்லை.
    இவற்றை எல்லாம் நாம் வழிபடும் கோவில்களில் அமுல்படுத்துவதே நம்கடமை.

    Saturday, October 17, 2009

    நான் தமிழனா இந்துவா ?

    இன்று தீபாவளி. வழக்கமான எண்ணைக்குளியல், புத்தாடை ,கடவுள் வழிபாடுவலைப்பூவில் எனது எழுத்து துவங்குவதால் எனக்கு முக்கியமான நாள்.

    நான் இந்து தமிழன் இதழ் நடத்தியபோது எனது அடையாளம் பற்றி இப்படிஒவ்வொரு இதழிலும் இப்படி வரும் ,

    " நான் இந்தியன் . தமிழ் இந்தியன் . இந்துதமிழன் . எல்லா இந்தியரும் எனது இனம். எல்லா இந்திய சாதியினரும் எனது உறவினர் . அனைத்து இந்தியமொழிகளையும் நான் நேசிக்கிறேன் . எனது தாய் மொழியான தமிழை பேணிவளர்ப்பதிலும் தமிழ் மரபுகளை கட்டி காப்பதிலும் எனக்குள்ள கடமையைநிறைவேற்றுவேன். இறைவனை நான் நம்புகிறேன் . அனைவருக்கும் சமநீதிகிடைக்க பாடுபடுவேன். இந்திய நாட்டில் வாழும் அனைவரும் எப்படி இந்தியரோஅப்படியே தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழரே. இந்த நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் , கலாச்சாரத்தை மதிக்கும் அனைவரும் அவர்கள் சகோதரகிறித்தவராக , இஸ்லாமியராக , பார்சிகளாக , இருந்தாலும் எனது பார்வையில்இந்துக்களே. எனவே நான் இந்து என்பதிலும் இந்தியன என்பதிலும் பெருமிதம்கொள்கிறேன். "

    இந்த அடையாள உணர்வை நான்காம் ஈழப்போர் புரட்டிப் போட்டுவிட்டது.

    இப்போது எனது அடையாளத்தை மறு பரிசீலனை செய்யும் மனநிலை எனக்குவந்து விட்டது.
    இலங்கை வேறு நாடு என்பதை நான் அறிவேன். அதற்காக அங்கே வாழும்தமிழர்கள் கொன்று ஒழிக்கபடுவதை மனிதாபிமானமற்ற முறையில் சும்மாபார்த்துக்கொண்டு கதரலாமே தவிர சத்தம் போடக்கூடாது என்பதைஏற்றுக்கொள்ள முடியாது.
    சத்தம் போடக்கூட இந்தியம் குறுக்கே நிற்கிறதா ?
    நான் தமிழன் என்ற உண்மையை இந்தியம் மறுக்கிறதா ?
    தமிழனாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது இந்துவாக இருந்தால்தமிழனாக இருக்க முடியாது என்று நான் இந்து தமிழன் இதழ் தொடங்கியபோதுசொன்னார்கள் .
    நான் மறுத்து வந்தேன். இலங்கையில் பெரும்பான்மை தமிழர்கள் இந்துக்களாகஇருந்தும் அவர்கள் பௌத்தர்களால் சிங்களர்களால் கொல்லப்பட்டுஅழிக்கப்பட்டு வருவதை இந்திய பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக எந்தசலனமுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே அப்போதுதான்ஒரு உண்மை புரிந்தது.
    இந்துவாக இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் உணர்ந்தால் பிற இந்துக்கள்அவர்களை அங்கீகரிக்க மாட்டர்கள்.
    அதிலும் குறிப்பாக நான் பெரிதும் மதிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள்சொல்லிவிட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் தோற்றது அவர்கள் தங்களைஇந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளாமல் போனதால்தான் என்று.
    அதாவது அப்படி சொல்லியிருந்தால் இந்தியாவின் பிற இந்துக்கள் உதவிக்கு ஓடிவந்திருப்பார்களாம். தங்களை தமிழர்கள் என்று சொல்லிகொண்டதால் அவர்கள்வரவில்லையாம். அதாவது அவர்கள் இந்து நம்பிக்கைகளைகொண்டிருந்தாலும்கூட.

    உண்மை என்ன.? தமிழனில் இந்து அடக்கமா? இந்துவில் தமிழன் அடக்கமா?
    தமிழ் பேசுவதால் மட்டுமா தமிழன். அவனது ஆன்மிக கொள்கை அந்த சொல்லில்அடங்கியிருக்கிறதே. ஆம் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே தமிழனின்ஆன்மிக கொள்கை. எனவே தமிழன் என்றாலே அவன் இந்து என்ற சொல்குறிக்கும் அத்தனை ஆன்மிக நம்பிக்கைகளை கொண்டிருக்கிறவன் என்றுதான்பொருள். திருவள்ளுவரும் திருமூலரும் வள்ளலாரும்தான் தமிழர்களுக்குஆன்மிக குருமார்கள். தமிழர்களில் கிறுத்துவர்களும் இஸ்லாமியர்களும்இருக்கிறார்களே? இருந்தால் என்ன? ஒளியிலும், கல்லிலும் , இயற்கையிலும்உணர்விலும் இறைவனைக்காணும் தமிழர்கள் ஏசுவிலும் அல்லாவிலும் கண்டுவிட்டு போகட்டுமே. எனவே தமிழன் என்ற சொல்லில் இந்து அடக்கம்..

    ஆனால் இந்து என்ற சொல்லில் தமிழன் அடங்க மாட்டான். அதாவது இந்து என்றசொல்லுக்கு குறுகிய பொருள் சொன்னால். உண்மையில் இந்து என்றசொல்லுக்கு பரந்த பொருள் உண்டு. உச்ச நீதி மன்ற தீர்ப்பில் கூட இந்து என்றால்அது ஒரு வாழ்க்கை முறை என்றே பொருள் சொன்னார்கள். அது ஒரு மதமல்லஎன்பதுதான் உண்மை. அதனால்தான் இந்து என்றாலும் தமிழன் என்றாலும் ஒரேபொருள்தான் என்றுதான் நான் இந்து தமிழன் என்று என் மாத
    இதழுக்கு பெயர் வைத்தேன். ஆனால் நடைமுறையில் சநாதன தர்மம்தான்
    நால்வருண நம்பிக்கைதான் பிராமநீயம்தன் இந்துத்துவம் என்று பொருள்கொள்ள தொடங்கிவிட்டார்கள். இந்துத்துவ பதாகையை தூக்கிகொண்டிருக்கிறஅத்தனை பேரும் அந்த பொருளில்தான் இன்று அந்த சொல்லைகையாளுகிறார்கள்.
    எனவேதான் இந்து என்ற சொல்லில் தமிழன் அடங்க மாட்டான் என்றுசொன்னேன்.
    நான் தமிழன் என்று சொன்னாலே போதும். எல்லா நம்பிக்கையையும் அதுஉள்ளடக்கும். மனிதம் நாத்திகம் சனாதனம் கிருத்துவம் இஸ்லாம் என்றுஅனைத்தையும். தனியே சொல்லிக்கொள்ள அவசியமில்லை. சொல்லிகொள்வது அவரவர் விருப்பம்.
    நான் தமிழனே என்று சொல்லும்போது இந்து இல்லை என்று மறுக்கவும்அவசியமில்லை. மறுப்பதாகவும் பொருளில்லை.

    தமிழ் என்ன மொழிதானே ? அதற்குமேல் என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள்தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர் களாகத்தான் இருப்பார்கள்.
    அவர்களுக்கு தமிழனின் குணமும் தமிழின் பொருளும் தெரிய வாய்ப்பில்லை. தவறுமில்லை.

    ஈழம் தந்த பாடத்தால் சொல்கிறேன் , இந்தியம் செய்த துரோகத்தால்சொல்கிறேன். இந்துக்கள் காட்டிய பாராமுகத்தால் சொல்கிறேன் .

    நான் தமிழனே , தமிழனே, தமிழனே.




    .