My Society
Friday, October 28, 2016
Thursday, March 31, 2011
தமிழை அரசியல் சட்ட எட்டாவது ஷேடியுலில் கண்ட அனைத்து மொழிகளோடும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று எழுதியதை பிரசுரித்தார்கள். ஏற்று கொள்ள மறுத்தார்கள். .
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்கள் கனவுத் திட்டம் என்பதால் தீர்மானம் போட்டார்கள். ஆனால் பின்னாளில் ராமர் பாலத்துக்கு ஆபத்து என்று சொல்லி கால்வாய் திட்டத்துக்கு நீதி மன்ற தடை வாங்கினார்கள்.
அனைத்து தரப்பினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற கலைஞர் கொண்டு வந்த சட்டத்துக்கு நீதிமன்ற தடை வாங்கினார்கள்.
Saturday, January 15, 2011
நம்பிக்கைகளை அறிவால் அளப்போம் தன்மானம் காப்போம்
நம்பிக்கைகளை அறிவால் அளப்போம்
நம்பிக்கையின் பேரால் அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்பவர்கள் அதற்கு பக்தி என்று பெயர் இடுகிறார்கள்.
அது எங்கள் தனி உரிமை என்றும் , மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை என்றும் கட்சி பேசுகிறார்கள். உண்மைதான் . அது உங்கள் வீட்டுக்கு உள்ளே இருக்கும்வரை உங்கள் உரிமைதான்
ஆனால் வெளியே பொதுவில் எல்லோரையும் பாதிக்கும் வகையில் நம்பிக்கையின் பேரால் செய்யப் படும் காரியங்கள் எப்படி தனி உரிமை ஆகும். ?
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே எப்போதோ யாராலோ தோற்றுவிக்கப் பட்டிருக்கும். ஆதாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் காலப்போக்கில் அவை மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்க கூடும.
அவைகளை மறு பரிசீலைனை செய்யவும் மறு சீரமைக்கவும் நம்பிக்கையாளர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா ?
எந்த நம்பிக்கையாளர்கள் குழு அத்தகைய பணியில் ஈடுபட்டு இருக்கிறது?
நடைமுறைக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவதால் அந்த சம்பிரதாயங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதை தவிர எந்த சாதனையை செய்கிறார்கள்?
மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்கிற சமுதாயம் நாம் என்பது உண்மையானால் சம்பிரதாயங்களை மறு பரிசீலனை செய்தே தீரவேண்டும்.
எந்த மாற்றத்தையும் எதிர்ப்பவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். ஓரளவு பெரும்பான்மை மக்களின் கருத்தை உறுதி செய்து கொண்டு சட்டத்தின் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
அறிவியல் உண்மைகள் வெளிவர வெளிவர நம்பிக்கை நெகிழ்ந்து உண்மைகளுக்கு இடம் கொடுக்கிறது. அப்படித்தான் எத்தனையோ நம்பிக்கைகள் மாறிவிட்டிருக்கின்றன.
சமத்துவமும் சமநீதியும் இல்லாத சம்பிரதாயங்களை மறு ஆய்வு செய்ய அரசுக்கு கடமை இருக்கிறது. அரசை வற்புறுத்த பக்தர்களுக்கு உரிமை இருக்கிறது.
பக்தர்களை யார் எழுப்புவது? அதுதான் பிரச்சினை. அவர்கள் மூடப்பழக்கத்தையும் மூர்க்கத்தனமாக பின் பற்றியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால் அரசு என்ன செய்யும்?
பக்தர்களை அப்படியே வைத்திருப்பதில் ஆதாயம் அடைபவர்கள் மௌனமாக பக்தர்களை உசுப்பி விடுகிறார்கள். இவர்களும் தலையாட்டி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பக்தி என்பதற்கும் பக்தர்கள் என்பவர்களுக்கும் புது விளக்கம் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எது பக்தி என்பதில் தெளிவு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இதெல்லாம் வேண்டாத வேலை என்றுதான் சீர்திருத்தவாதிகள் ஒரேயடியாக கடவுளை மறுத்து விட்டால் என்ன என்று பரிகாரம் சொல்கிறார்கள்.
ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படை பக்தியின் பேரால் நடக்கும் அநீதிகளே.
இறைவன் ,இறைவி அல்லது இறைசக்தி ஏதேனும் ஒன்றை பக்தர்கள் நம்பி வாழ்கிறார்கள். ஆனால் சம்பிரதாயங்களை இவர்களே உருவாக்கிக்கொண்டு , ஆதாயம் அடைந்துகொண்டு , அதற்கு அவர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள. இதற்கு பெயர் பக்தியா? வாழும் உத்தியா?
அறிவால் நம்பிக்கைகளை அளக்க முடியுமா? ஏன் முடியாது? அதற்கும் ஓர் அளவுகோல் வைத்தால் முடியும்.
எந்த நம்பிக்கை பக்தனுக்கு இழப்பு ஏற்படுத்தாததோ , எது பாரபட்சம் அற்றதோ , எது சமநீதியை வலியுறுத்து கிறதோ , எது தன்மானத்தை பாதிக்காததோ அவற்றை பின்பற்றி மற்றவற்றை மறு பரிசீலனை செய்யலாமே?
நோக்கம் ஆதிக்கத்தை அகற்றுவது. ஆதிக்கத்தை அமுல்படுத்தவே சம்பிரதாயங்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிலை நாட்டுவது.
எனவே சம்பிரதாயங்களை அறிவால் அளப்போம். இழப்புகளை தடுப்போம். தன்மானத்தை இழக்க மறுப்போம். பக்தர்கள் அடிமைகள் என்ற முத்திரைகளை ,நினைவுகளை, எதிர்பார்ப்புகளை உடைப்போம்..
Sunday, January 2, 2011
Saturday, January 1, 2011
Saturday, October 2, 2010
thanmana bhakthar peravai
ஏசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டால் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமா?
நபிகள் நாயகத்தின் வழி காட்டுதலில் குரான் சொல்லும் கருத்துக்களில் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட ஒருவன் முஸ்லிம் ஆக வேண்டுமா?
இன்னும் பெரும்பாலான மதங்களில் அதன் சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு கூட அதனை பின் பற்றுபவராக அடையாள படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும் என்பது மரபாகி விட்டது. இது சரியா?
மதத்தோடு அடையாள படுத்திகொள்கிறவர்கள் தங்களின் தன்மானம் பற்றி கவலைப் படாதவர்கள் .
எனது கேள்வியெல்லாம் கடவுள் நம்பிக்கைக்கும் கடவுளின் பேரால் நிறுவனமாக்கப் பட்டிருக்கும் மதங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான்.?
எல்லா வழிபாடு முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தியாவில் உருவான பல்வேறு வகை சமயங்களும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள ' இந்து' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி நிற்கின்றன.
ஆனால் இந்த சமய நிறுவனங்களில் பக்தனின் தன்மானம் விலை பேசப் படுகிறதே என்று எந்த பக்தனும் கவலைப் படுவதில்லையே ஏன்?
பெயர் வைப்பதில் தொடங்குகிறது அடிமைத்தனம்.
நான் கிறிஸ்தவன் , முஸ்லிம், இந்து, சீக்கியர், என்று பெயரிலேயே காட்டிவிடுகிறோம்.
கடவுள் நம்பிக்கையை பெயரில் காட்டக்கூடாது என்று சர்வதேச மரபு இருக்குமானால் மத வெறுப்பு மறைந்தே போகும்.
எல்லா மதங்களுமே நல்லதைத்தான் சொல்கின்றன என்ற உண்மை வெளிப்படும்.
மக்களை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்ல துடிக்கும் மதங்கள் தான் உலகில் பெரும்பாலான பிரச்சினை களுக்கு காரணமாக இருக்கின்றன.
சரி. மற்றவர்கள் இருக்கட்டும். தமிழ் நாட்டில் பக்தர்கள் எப்படி நடந்து
கொள்கிறார்கள்.அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று
சட்டம் கொண்டு வரப்பட்டது . அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி
எல்லா சாதிக்காரர்களையும் உள்ளடக்கி இரு நூற்று மாணவர்களுக்கு பயிற்சி
கொடுத்தது. இவர்கள் தொட்டால் சாமி ஓடிவிடும் என்று சொல்லி பிராமணர்கள்
உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்கினார்கள். வேலை கொடுக்க முடியாததால்
அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மூடிவிட்டது.
தங்கள் சாதி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணியில் நியமிக்க விடாமல்
சதி செய்யும் உயர்ந்த சாதி அர்ச்சகர்கள் மேல் ஏன் பக்தர்களுக்கு கோபம் வர வில்லை.? அதாவது தங்கள் சாதி அர்ச்சகர்கள் பூசை செய்தால் நாங்கள் வர மாட்டோம் என்று பிற சாதியினர் சொல்லுகிறர்களா? அப்படி சொல்லித்தான் உச்ச
நீதி மன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலைப் படாத பக்தர்கள் இருக்கும் வரை எந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த முடியும்?
உச்ச நீதிமன்ற தடையாணையை நீக்க தமிழ் நாட்டு அரசு முயற்சி
எடுப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும். அரசு கொண்டு வந்த நல்ல
சட்டத்தை அமுல் படுத்த முடியாமல் தடுக்கும் சதிகாரர்களுக்கு எதிராக
பக்தர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் தடையும் நீக்கப்ப் பட்டிருக்கும்.
தமிழும் தமிழர்களும் கருவறைக்குள் நுழைந்திருப்பார்கள்.
இப்போது சொல்லுங்கள் . பக்தர்களுக்கு தன்மானம் இருக்கிறதா?
இருந்திருந்தால் சட்டத்தை எதிர்ப்போரிடம் அர்ச்சனை செய்யும் படி
கேட்கமாட்டோம் என்று முடிவெடுதிருப்பார்கள்.
இறைவனை மட்டும் தரிசித்து விட்டு அர்ச்சகர்களை இவர்கள்
தவிர்த்திருப்பார்கள்.
எனக்குத் தெரிந்து பல மாவட்டங்களில் முன்பு சுயமரியாதை
திருமணங்கள் செய்தவைகள் கூட இப்போது வைதீக திருமணம் செய்கிறார்கள்.
ஏன் தெரியுமா? இப்போதெல்லாம் புரோகிதர்கள் தமிழிலேயே திருமண
மந்திரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். புரியாத மொழியில்
சொல்லி மக்கள் புறக்கணிக்க தொடங்கியதன் விளைவு இப்போது
தமிழில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அதேபோல் கோயிலிலும் தமிழில்
அர்ச்சனை சொல்லாத அர்ச்சகர்களை பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது மட்டும்தான் அவர்களுக்கு உரைக்கும்.
நம்பிக்கையின் பேரால் அடிமைத்தனத்தை வளர்க்க வேண்டாம்.