1939 இல் நடந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் அரிஜன ஆலயப் பிரவேசம்பெரிதாக பேசப்பட்டு இன்றளவும் சாதனையாக எடுத்துக் காட்டப்படுகிறது.
ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் போராட வேண்டியகட்டாயத்தில்தான் தலித் சமுதாயம் இருக்கிறது.
அப்போது ஆனந்த விகடன் எழுதியது , " சுவாமி இருக்கிறாரா? ௧. கடவுள்எல்லையற்ற கருனையுடையவர். ௨. கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் , என்று நாம்நம்புகிரோம . ஆனால் மதுரை வைதீக கோஷ்டி தலைவர்களோ , கடவுள்ஹரிஜனங்களை வெறுக்கிறார். அவர்கள் கிட்ட வந்தால் கடவுளின் சக்திபோய்விடுகிறது." என்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக பொது ஜனங்கள் அப்படிக்கருத வில்லை. மதுரை கோவிலில் சுவாமியும் அம்மனும் இருப்பதாகவே நம்பித்திரளான ஜனங்கள் கோவிலுக்குப் போகிறார்கள் ."
நாகப்பட்டினம் மாவட்டம் செட்டிபுலம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில்
நுழைவு போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் நடத்தி தோல்வி கண்டபின்
மீண்டும் அதே முயற்சியை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவம்பர் இரண்டாம்
தேதி தொடர தீர்மானித் திருக்கிறார்கள் .
நடப்பது ஆன்மிக நாட்டமா? சாதிச்சண்டையா?
கோவில்கள் பக்தி தவிர இதர எல்லா நோக்கங்களுக்கும் பயன் படுகின்றன.
இங்கு மார்க்சிஸ்டுகள் தங்கள் வோட்டு வங்கியை பாது காத்துக்கொள்ள ஆலயநுழைவு போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தலித்துகளுக்கு எதிராக வன்னியர் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டு எதிர்கிறார்கள்.
உலகத்திலேயே சொந்த மக்களையே அந்நியப்படுத்தும் மதம் / நம்பிக்கைஇந்துவாகத் தானிருக்கும்.
நாத்திகன் கோவிலை பார்த்தால் இதை வைத்து எத்தனை பிராமணன் பிழைப்புநடத்திக் கொண்டிருகிறான் என்று கணக்கு தேடுவான் .
அரசியல்வாதி கோவிலை சுற்றி வருவது இதில் என்ன கிடைக்கும் என்று ஆழம்பார்க்க . தர்ம கர்த்தா ஆகி பணம் பார்பதா அல்லது சிபாரிசு வைத்து டெண்டர்வேலை வாங்கி சம்பாதிப்பதா என்ற சிந்தனை .
திருடன் எங்கே சிலை கிடைக்கும் என்று அலைகிறான்.அவனும் பக்தி வேடம்போட்டு கோவிலுக்குள் அமர்ந்திருப்பான்.
பணம் படைத்தவன் அர்ச்சனை செய்கிரவருக்கும் நிர்வாகத்தில்இருக்கிரவருக்கும் லஞ்சம் கொடுத்து சாமியை குறுக்கு வழியில் தரிசனம் செய்துவேண்டுகோள் வைப்பது மட்டுமின்றி அதற்கு சாமியையும் கூட்டாளிஆக்கிகொள்வான்.
செட்டிபுலத்திலும் பிற கிராமங்களிலும் வாழும் இந்துக்கள் சுவாமியை பற்றிஎன்னதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த சுவாமி பாகுபாடுஅநியாயங்களை கண்டிக்காத சுவாமி , அதற்கு சக்தியில்லாத சுவாமிஎன்பதுதானே. இதைவிட சுவாமியை எப்படி அவமதிப்பது என்றோகேவலப்படுத்துவது என்றோ எனக்குத் தெரியவில்லை.
ஆக, நடப்பது சாதிச்சண்டைதானே தவிர சாமிச்சண்டையில்லை.
சாமியிடம் பேரம் பேசுவதை விட வேறு என்ன அக்கிரமம் இருக்க முடியும்?
" கல்லில் மட்டும்தான் சாமி இருக்கிறார் என்று விபரம் தெரிந்த யாரும் நம்பமாட்டர்கள். " என்று மறைந்த காஞ்சி பெரியவர் சொல்லி இருக்கிறார் என்றால்யார் நம்ப போகிறார்கள்?
சாமி , நம்பிக்கை இதன் இலக்கணங்களை எல்லாம் பக்தர்கள் தான் , கோவில்களை நிர்வகிப்பவர்கள் தான் உடைத்து தூளாக்கி கொண்டிருக்கிறார்கள்
. பாமரன் பக்தி செய்பவனாக இருந்தாலாவது இந்த தவறுகளை மன்னிக்கலாம். படித்தவனும் பண்டிதனும் இதே தவறை செய்வதை எப்படி மன்னிப்பது?
பக்தி செய்பவனுக்கு தன்மானம் தேவை இல்லை நம்பிக்கை மட்டுமே போதும்என்பதுதான் இன்றைய பக்தி இலக்கணம்.
எந்த சீர்திருத்தத்தை பக்தன் முன்னெடுதிருக்கிறான்?
நம்பிக்கை என்று நேற்று இருந்தது எல்லாம் என்று மறைந்து போனதற்குநாத்திகனும் சிந்தனையாளனும் தானே காரணம்.
பக்தர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்யஇதுவே தருணம்.
நம்பிக்கையின் பேரால் அடிமைத்தனத்தை சகித்துக்கொள்ளும் மடமைஒழியட்டும். இறைவன் எல்லா மனிதரையும் மொழிகளையும் படைத்தவன்என்பதால் அவனுக்கு பாரபட்சம் இருக்க முடியாது என்பதை நம்புவோம்.
எனவே எல்லா மனிதரும் எல்லா மொழிகளாலும் இறைவனை அர்ச்சிப்பதே
உண்மையான வழிபாடு என்பதை உணருவோம்.
அந்த உணர்வு வரும் வரை இந்து என்று சொல்லிகொள்வதில் ஒரு மரியாதையும்இல்லை.
இவற்றை எல்லாம் நாம் வழிபடும் கோவில்களில் அமுல்படுத்துவதே நம்கடமை.
No comments:
Post a Comment