தமிழர் அல்லாதோர் கணக்கெடுப்பு வேண்டும்.
இந்திய நாட்டுக்குள்ளே தமிழர்களின் மொழி , கலாச்சாரம் , அடையாளம் , தன்மை ஆகிய
வற்றை பேணிப் பாதுகாக்க உள்ள உரிமைகளை முன்னெடுத்துச் செல்வது இந்து தமிழர்
இயக்கம். நான் அதன் தலைவர்.
இயக்கத்தின்படி இந்து என்ற சொல்லுக்கு அது ஒரு வாழ்க்கை முறை. கிருத்துவ ,
இஸ்லாமிய, யூத , பார்சி மதங்கள் மடடுமல்லாது இந்தியாவில் தோன்றிய புத்த , ஜைன ,
சீக்கிய மதங்களும் செயல் படுவதை அங்கீகரிக்கிறது . இது உச்ச நீதிமன்ற பல தீர்ப்புகளில்
விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானிக்க பட்டிருக்கிறது.
தமிழை தாய் மொழியாக கொண்டோர் தமிழர் . தமிழ் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்க பட்டிருக்கிறது. தவிரவும், 1956 இல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டம் வந்த பிறகு தமிழகத்தில் வசிக்கிற எல்லோரும் , அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிரா விட்டாலும் கூட , தங்களை தமிழர்கள் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அதாவது மறைமுகமாக தாங்கள் வாழுகிற அல்லது வாழ தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்த மாநில மொழியான தமிழை பேணி பாதுகாக்க அவர்களுக்கு இருக்கும் தார்மிக கடமையை ஒப்புக்கொண்டார்கள்.
தமிழின் மேம்பாட்டிற்கு இவர்களின் பங்களிப்பு , தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை விட சில நேரங்களில் அதிகம்.
இந்து என்ற சொல் இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக் கானவர்களின் மனங்களில் கடவுள் , மதம் போன்றவை பற்றி கொண்டிருக்கும் பொருளோடு பிரிக்க முடியாத படி இணைந்துவிட்ட ஒன்று.
கேரளாவில் இருந்து மலையாளிகள் ; ஆந்திராவில் இருந்து தெலுங்கர்கள் ; கர்நாடகாவில் இருந்து கன்னடியர்கள்; மகாராஷ்ட்ராவில் இருந்து மராட்டியர்கள் ; வங்கத்தில் இருந்து வங்காளிகள் ; குஜராத்தில் இருந்து சொவ்ரஷ்ட்ரர்கள்;உருது பேசும் முஸ்லிம்கள் ; மற்றும் ராஜஸ்தான் , ம.பி., ; வு.பி, பீகார் மாநிலங்களில் இருந்து இந்தி பேசும் மக்கள் அனைவரும் இதுநாள் வரை தமிழை தாய் மொழியாக கொண்டிருப்பவர்களுடன் சுமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது எண்ணிக்கை தொடக்கத்தில் ஐந்து முதல் பத்து ஆக இருந்து தற்போது பதினைந்து முதல் முப்பத்தைந்து சதமாக உயர்ந்து கொண்டே போகிறது. முக்கியமாக இவர்கள் தான் தமிழ் பின்னணியை கொண்டவர்களை விட செல்வத்திலும், படிப்பிலும்., சமுதாய ரீதியிலும் , ஏன் அரசியல்ரீதியிலும் கூட வலு உள்ளவர்களாக விளங்குகிறார்கள்.
இந்தியா என்பது பல மொழிகள் , மதங்கள், இனங்கள், குறிப்பிட்ட பிரதேச குணங்களை எல்லாம் பின்னி பிணைந்து விளங்கும் ஒரு தேசம். அதன் அரசியல் சட்டம் மத்திய மற்றும் சமழ்டி முறையை கொண்டது. அரசியல் சட்ட பிரிவு பத்தொன்பது அதன் குடிமக்களுக்கு நாடு முழுவதும் சுற்றி வரவும் இந்தியா நிலப் பகுதி எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் குடியேறவும் , எந்த தொழிலை , வணிகத்தை , வேலையை மேற்கொள்ளவும் உரிமை வழங்குகிறது.
அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின் பிரிவு இருபத்துஒன்பது , சிறுபான்மையர் நலன் காத்தல் என்ற தலைப்பில் தன் நிலபரப்பில் வாழும் குடிமக்களுக்கு அவர்கள் தங்களது தனித்துவமான மொழி , எழுத்து, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது.
இந்திய மக்கள் தொகையில் ஆறு.புள்ளி ஐந்து சதமானமே இருக்கும் தமிழர்கள் சிறுபான்மையர் ஆவர். அவர்களுக்கு தங்கள் தனித்துவ மொழி , எழுத்து, கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது. இந்த அரசியல் சட்ட உரிமைக்குத்தான் இப்போது ஆபத்து.
இந்திய மக்களை பிணைக்கிற , இந்திய அரசியல் சட்டத்தின் அடித்தள கொள்கையாக விளங்குவது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பொன்னான கொள்கை. அது குறிப்பாக தீர்க்கமாக வலியுறுத்துவது ' வேற்றுமை ' என்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைத்தான்.
வேறுவகையில் பொருள் கொண்டால் பன்முக தன்மை கொண்ட வேற்றுமைகளை பாதுகாக்கவிட்டால் ஒற்றுமை இருக்காது என்பதுதான். நமது அரசியல் சட்டம் பல்வேறு குணங்களையும் மொழிகளையும் கலாச்சாரங்களையும் பலி கொடுத்தாவது ஒற்றுமையை
காக்க வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை. இரண்டும் இணைந்தே வாழ முடியும் என்பது தான் இந்தியாவின் தனி சிறப்பு மிக்க பாரம்பரியம்.
ஒன்றைதாழ்த்தி மற்றொன்றை உயர்த்த விழைகிறவர்கள் உண்மையில் இந்தியாவின் வெற்றிகரமான வேற்றுமையில் ஓற்றுமை என்ற கொள்கைக்கு ஊறு விளைவிக்கிரவர்கள்.
தமிழர்களுக்கு மற்றவர்களோடு ஒத்து போவதிலும் விட்டு கொடுப்பதிலும் எந்த காலத்திலும் பிரச்னை வந்ததில்லை. மற்ற உயிர் இனங்களோடு இணைந்து வாழ்வது அவர்களது உடன் பிறந்த பண்பாடு. தமிழர் கலாச்சாரத்தை இரண்டே வரிகளில் விளக்கலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
துரதிருஷ்டமாக எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதின் காரணமாக இன்று தமிழ் மொழியும் கலாச்சாரமும் பிழைத்திருபதே கேள்விக் குறியாக மாறிவிட்டது. எல்லா மொழிக் குழுக்களையும் போலவே தமிழர்களும் சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறார்கள்.தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்கிற நிலையில் அவர்கள் இல்லை. பாதுகாக்க வேண்டிய தனித் தன்மை வாய்ந்த கலாச்சாரம் தமிழர்களுக்கு இல்லை என்று கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரத்தை கண்டு மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கத்தான் அவர்களால் முடிகிறது.
அவர்களது மொழியின் தனித் தன்மை அதை அழிக்கும் நோக்கோடு திட்டமிட்டு சிதைத்து பயன்படுத்தப் படுகிறது . சதியோ இயற்கையோ தமிழ் தன் இயற்கை வடிவத்தை இழந்து வருகிறது. . கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசு தமிழ் மொழி பாதுகாப்புக்கு அர்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் கூட பல சூழ் நிலைகளால் அதை முழுமையாக நிறை வேற்ற முடியாத நிலைமை உள்ளது.
மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைந்த பிறகு மாநில அடையாளங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் அனுபவம் நம் கண்களை திறக்க வேண்டும். மும்பையில் மராட்டியர் அல்லாதவர் 50லட்சத்தை தாண்டிய பிறகு இந்தியை ஆட்சி மொழியாக்க கோரிக்கை எழுந்தது. மேம்போக்காக பார்க்கும்போது அது நியாயம்தான். அனால் மராத்தி ஒதுக்கம்படும் சூழ்நிலை வந்தபோது இந்தியை அனுமதிக்கும் முடிவு ஒத்தி வைக்கபட்டிருக்கிறது.
தவறான மொழிக்கொள்கை மன வருத்தங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கிறது. உதாரனமாக நேருவின் பாராளுமன்ற உறுதிமொழி , அதாவது, " இந்தி பேசாதவர்கள் விரும்பும் வரை ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் நீடிக்கும் " என்ற உறுதிமொழி, அமுல்படுத்தப் பட்டு வந்தாலும் அதற்கு சட்ட பின்புலம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு பிரிவு 344(௧) மற்றும் 351
படி எட்டாவது பட்டியலில் கண்ட பதினைந்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழி ஆக்குவது தான் .
தமிழகத்தில் தமிழை வாழ்க்கையின் பல தடங்களில் பயன் படுத்த முடியவில்லை. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட அரசு ஊக்கதுகை கொடுக்க வேண்டியுள்ளது. வணிக நிறுவனங்கள் அரசு அதிகாரிகளின் தாக்கீதுக்குப் பிறகும் தமிழில் பிரதானமாக பலகைகளையும் அடையாளங்களையும் வைக்க தவறுகிறார்கள் . தமிழகத்தில் தொடக்க கல்விகூட கட்டாயமாக இல்லை. சமீபத்தில் ஒரு சம்பவம். சென்னைக்கு அருகே ஒரு ரயில்வே நிலையத்தில் ஒரு வடநாட்டு வூழியர் தமிழ் விண்ணப்பதை வாங்க மறுத்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட வேண்டிய தாகி விட்டது. மக்களை இந்தியாவில் எந்த இடத்திலும் குடியேற முடியாமல் தடுப்பது முடியாது என்பதும் உண்மைதான். தமிழர்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குடியேறி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அந்தந்த மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இல்லாத படிக்கு கட்டுக்குள் இருக்கும்வரை பிரச்னை ஏதுமில்லை. அந்தந்த மொழிகளின் , பண்பாட்டின் , வருவாய் ஈட்டும் சக்திக்கு அபாயம் ஏற்படுத்தினால் பல பிரச்னைகள் தோன்றத்தான் செய்யும் .
அதே போல தமிழர் அல்லாதோர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ் தவிர பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் எண்ணிக்கை பற்றி முரண்பாடான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் தாங்கள் மாநிலத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் என்கிறார்கள். தமிழ் மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. இங்கு வாழ்பவர்களின் தாய் மொழி பற்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் இந்த முரண்பாடான தகவல்கள் முடிவுக்கு வரும். அரசியல் சட்டத்தின் 19இ பிரிவை பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமையை அனுமதிக்கும் அதே நேரத்தில் பிரிவு 29ஒன்றின் படி தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள அனுமதிப்பது எப்படி என்பதுதான் முக்கிய கேள்வி. இதில் சட்டத்தின் பாது காவலர்களாக விளங்கும் மத்திய மாநில அரசுகள்தான் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும்.
இதை தடுக்க முடியாமல் போனால் சட்ட ஒழுங்கு கெட்டு கலவர சூழ் நிலை உருவாகலாம். சில மாநிலங்களில் விவசாயிகள் அல்லாதோர் வேற்று மாநிலத்தோர் விவசாய நிலங்களை உடைமைகளாக வைத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சிலவற்றில் வட மாநிலங்களை சேர்ந்த சிலர் ஐநூறு ஆயிரம் என்று தரிசு நிலங்களை வாங்கி அவற்றை வங்கி அதிகாரிகளின் துணை கொண்டு ஈடு வைத்து பெரும் தொகைகளை கடன் வாங்கி இருக்கிறர்களாம்.
எவர் மீதும் நமக்கு விரோதமில்லை. நமக்கு தமிழ் நாட்டில் அதிக எண்ணிகையில் குடியேறிவரும் தமிழர் அல்லாதோர் காரணமாக தொன்மை மொழிக்கும் கலாச்சாரதிற்கும் அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருந்தால் சரிதான். இது வரைக்கும் பரவாஇல்லை . எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் இந்த மனுவிற்கு அடிப்படை.
இலங்கையில் தமிழர்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். இன்னமும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தமிழர்கள் இந்த கொடிய இனப் படுகொலைகளை சிங்களர்கள் ரத்த தாகத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நிகழ்த்தியபோது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
அந்தக் கொடிய குற்றங்களை நிகழ்த்திய பிறகும்கூட பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதைக் கூட பேச தயாராக இல்லாமல் தமிழ் நாட்டிலிருந்து ஆதரவுக் குரல் எழுவதை எப்படி கட்டுப் படுத்துவது என்றுதான் திட்ட மிடுகிறார்கள். கணக்கெடுப்புத் துறை எதைப் பற்றியும் கவலையில்லாமல் இருப்பதுடன் மாநிலங்களுக்கு இடையே நிகழும் மக்கள் நடமாட்டத்தைப் பற்றி எந்த கணக்கும் அவர்கள் எடுப்பதில்லை. இதைப் போன்ற கட்டுப் படுத்தப் படாத கண்காணிக்கப் படாத இட மாற்றங்கள்தான் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
அடிப்படை உரிமை ஒன்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத முழு உரிமைகள் அல்ல. அதைப் போலவே குடியேற்ற உரிமையும் கூட நியாயமான கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டவைதான்.அந்த கட்டுபாடுகள் என்ன என்பதையும் எப்படி அமுல்படுத்துவது என்பதையும் அரசும் அதிகாரிகளும்தான் தீர்மானிக்க வேண்டும்.எனக்கு நீதிமன்றத்திற்கு வருவதை தவிர வேறு வழியில்லை.
எனவே நீதிமன்றம் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கள் எத்தனை சதம் பேர்
தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு அமைப்பை அமைக்கும் படியும் அல்லது மேற்கண்ட காரியத்திற்காக எதிர்வரும் மக்கட் தொகை கணக்கெடுப்பின்போது அத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ளும்படி கணக்கெடுப்பு அமைச்சகத்தை அறிவுறுத்தியும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான குடியேற்ற உரிமைகளுக்கு என்ன விதமான நியாய கட்டுபாடுகளை விதித்து அந்தந்த மாநில, குறிப்பாக தமிழ் மாநில மொழியான,தமிழ் மொழி , கலாச்சாரம் ,எழுத்து , அடையாளம் இவற்றை பாதுகாப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளை வகுத்து அமுல்படுத்தும் படியும் உத்தரவிட கேட்டுக் கொள்கிறேன்.

( சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்து தமிழர் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர்
வி. வைத்தியலிங்கம் ஆகிய நான் தாக்கல் செய்திருக்கும் மனுவின் சாரம். )
No comments:
Post a Comment