Thursday, March 31, 2011

அறிவாலயத்தில்  நடந்த இணைப்பு விழா

கடந்த பிப்ருவரி மாதம் பதினோராம் தேதி அறிவாலயத்தில் நடந்த இணைப்பு விழாவில் நானும் முன்னாள் பா. ஜ. க. மாநில தலைவர் டாக்டர்  எஸ். பி. கிருபாநிதியும் கவிஞர் காசி முத்து மாணிக்கமும் முதல்வர் கலைஞர் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தோம்.    சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.  தளபதி துணை முதல்வர்  ஸ்டாலின் வரவேற்றார்.   பேராசிரியர் அன்பழகன் , ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்  , நேரு , வேலு முதலான அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.

முப்பதாண்டுக்கு மேலான பா. ஜ. க.வுடன் ஆன தொடர்பை துண்டித்துக் கொண்டு தி. மு. க. வில் இணைவது ஏன் என்பது பற்றி நான் விளக்கி பேசினேன். 
"    ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து  ஐந்தாம் ஆண்டு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவராக இந்தி எதிர்ப்பு போராட்டகளத்தில் நின்ற போது எனக்கிருந்த உணர்வு மொழி பாதுகாப்பு உணர்வு.
ஆயிரத்து தொள்ளாயிறது எழுபத்து இரண்டாம் ஆண்டு  சிந்தனை வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்றிய போது எனக்கிருந்தது தேசிய உணர்வு. .
ஆயிரத்து தொள்ளாஇரத்து எழுபத்து ஐந்தாம் ஆண்டு  அவசர நிலை பிரகடனத்துக் கெதிராக போராடியபோது எனக்கிருந்த உணர்வு ஜனநாயக பாதுகாப்பு  உணர்வு.  எழுபத்து ஏழில் நான் தஞ்சை சட்ட மன்ற ஜனதா கட்சி வேட்பாளர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பது முதல் நேற்றுவரை  முப்பதாண்டுகள்  பா. ஜ. க. வில் மாநில துணை தலைவராகவும் செய்தி தொடர்பாளராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியபோது  எனக்கிருந்த உணர்வு சமய பாதுகாப்பு உணர்வு.
வாலை நிமிர்த்த முடியும் என்று நம்பி நான் முப்பதாண்டுகள் கழித்தேன் என்று சொல்ல எனக்கே வெட்கமாக  இருக்கிறது.   ஆனால் அதற்கு முகாந்திரம் இருந்தது.
தமிழை அரசியல் சட்ட எட்டாவது ஷேடியுலில் கண்ட அனைத்து மொழிகளோடும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று எழுதியதை பிரசுரித்தார்கள். ஏற்று கொள்ள மறுத்தார்கள். .
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்கள் கனவுத் திட்டம் என்பதால் தீர்மானம் போட்டார்கள்.  ஆனால் பின்னாளில் ராமர் பாலத்துக்கு ஆபத்து என்று சொல்லி கால்வாய் திட்டத்துக்கு நீதி மன்ற தடை வாங்கினார்கள்.
அனைத்து தரப்பினரும் அர்ச்சகராக  ஆகலாம் என்ற கலைஞர் கொண்டு வந்த சட்டத்துக்கு நீதிமன்ற தடை வாங்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப் பட்டு வருவதை கண்டித்து போராடுபவர்களுக்கு  ஆதரவு தர வேண்டும் என்றேன்.  அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்லையே எப்படி ஆதரிப்பது என்றார்கள்.  
அப்போதுதான் உணர்ந்தேன்.   இவர்கள் மாற மாட்டார்கள்.  நாம் தான் தவறாக புரிந்து கொண்டு  ஏமாந்து இருக்கிறோம்.
தமிழர்களுக்கு கழகத்தை விட்டால் வேறு பாதுகாப்பு இல்லை என்பதை புரிது கொண்டு வந்திருக்கிறோம்.  தாயுள்ளத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றியுடன் பணியாற்றுவோம்.
தளபதி ஸ்டாலின் எதிரிகளால் கூட கண்ணியத்துடன் விமர்சிக்கப்படும் தலைவர்.   அவரை நான் எதிர்கால தலைமுறைத் தலைவராகத்தான் நான் பார்க்கிறேன்.  
கழகம் மேலும் வலிவு பெற உழைப்போம் என உறுதி கூறுகிறோம்.   "

முதல்வர் கலைஞர் வரவேற்று ஆசி கூறினார்.
அடுத்த நாள் முரசொலி மற்றும் தினத்தந்தி தினமலர் தினகரன் ஏடுகளில் செய்தி வந்தபோது பலர் விசாரித்தார்கள்.
அதிகமாக முயற்சி எடுத்து பிரச்சாரம் செய்யாமல்  இணைந்த பிறகு அன்போடு விசாரித்த அனவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வேறுபாடுகள் எப்படி பெரிதாகிப் போனது என்பதை வருங்காலத்தில் விளக்கமாக  விவரிக்க இருக்கிறேன் .   

--- வி.  வைத்தியலிங்கம்


Saturday, January 15, 2011

நம்பிக்கைகளை அறிவால் அளப்போம் தன்மானம் காப்போம்

நம்பிக்கைகளை  அறிவால் அளப்போம்

நம்பிக்கையின் பேரால் அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்பவர்கள் அதற்கு பக்தி என்று பெயர் இடுகிறார்கள்.

அது எங்கள் தனி உரிமை என்றும் , மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை என்றும்  கட்சி பேசுகிறார்கள். உண்மைதான் .   அது உங்கள் வீட்டுக்கு உள்ளே இருக்கும்வரை உங்கள் உரிமைதான்

ஆனால் வெளியே  பொதுவில் எல்லோரையும் பாதிக்கும் வகையில் நம்பிக்கையின் பேரால் செய்யப் படும் காரியங்கள் எப்படி தனி உரிமை ஆகும். ?  

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே எப்போதோ யாராலோ தோற்றுவிக்கப் பட்டிருக்கும். ஆதாரம் இல்லாமல் இருக்காது.  ஆனால் காலப்போக்கில் அவை மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்க கூடும.  

அவைகளை மறு பரிசீலைனை செய்யவும் மறு சீரமைக்கவும் நம்பிக்கையாளர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா ?

எந்த நம்பிக்கையாளர்கள் குழு அத்தகைய பணியில் ஈடுபட்டு இருக்கிறது?

நடைமுறைக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவதால் அந்த சம்பிரதாயங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதை தவிர எந்த சாதனையை செய்கிறார்கள்?

மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்கிற சமுதாயம் நாம் என்பது உண்மையானால் சம்பிரதாயங்களை மறு பரிசீலனை செய்தே தீரவேண்டும்.

எந்த மாற்றத்தையும் எதிர்ப்பவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். ஓரளவு பெரும்பான்மை மக்களின் கருத்தை உறுதி செய்து கொண்டு சட்டத்தின் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

அறிவியல் உண்மைகள் வெளிவர வெளிவர நம்பிக்கை நெகிழ்ந்து உண்மைகளுக்கு இடம் கொடுக்கிறது. அப்படித்தான் எத்தனையோ நம்பிக்கைகள் மாறிவிட்டிருக்கின்றன.

சமத்துவமும் சமநீதியும் இல்லாத சம்பிரதாயங்களை மறு ஆய்வு செய்ய அரசுக்கு கடமை இருக்கிறது. அரசை வற்புறுத்த பக்தர்களுக்கு உரிமை இருக்கிறது.

பக்தர்களை யார் எழுப்புவது?    அதுதான் பிரச்சினை.   அவர்கள் மூடப்பழக்கத்தையும் மூர்க்கத்தனமாக பின் பற்றியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால் அரசு என்ன செய்யும்?

பக்தர்களை அப்படியே வைத்திருப்பதில் ஆதாயம் அடைபவர்கள் மௌனமாக பக்தர்களை உசுப்பி விடுகிறார்கள்.   இவர்களும் தலையாட்டி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பக்தி என்பதற்கும் பக்தர்கள் என்பவர்களுக்கும் புது விளக்கம் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து கொண்டிருக்கிறது.   எது பக்தி என்பதில் தெளிவு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

இதெல்லாம் வேண்டாத  வேலை என்றுதான் சீர்திருத்தவாதிகள் ஒரேயடியாக கடவுளை மறுத்து விட்டால் என்ன என்று பரிகாரம் சொல்கிறார்கள்.

ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படை பக்தியின்  பேரால் நடக்கும் அநீதிகளே.

இறைவன் ,இறைவி அல்லது  இறைசக்தி ஏதேனும் ஒன்றை பக்தர்கள் நம்பி வாழ்கிறார்கள்.   ஆனால் சம்பிரதாயங்களை இவர்களே உருவாக்கிக்கொண்டு , ஆதாயம் அடைந்துகொண்டு , அதற்கு அவர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள.   இதற்கு பெயர் பக்தியா?   வாழும் உத்தியா?

அறிவால் நம்பிக்கைகளை அளக்க முடியுமா?   ஏன் முடியாது?   அதற்கும் ஓர் அளவுகோல் வைத்தால் முடியும்.

எந்த நம்பிக்கை பக்தனுக்கு இழப்பு ஏற்படுத்தாததோ , எது பாரபட்சம் அற்றதோ , எது சமநீதியை வலியுறுத்து கிறதோ ,  எது தன்மானத்தை பாதிக்காததோ  அவற்றை பின்பற்றி  மற்றவற்றை மறு பரிசீலனை செய்யலாமே?

நோக்கம் ஆதிக்கத்தை அகற்றுவது.    ஆதிக்கத்தை அமுல்படுத்தவே சம்பிரதாயங்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிலை நாட்டுவது.

எனவே சம்பிரதாயங்களை அறிவால் அளப்போம்.   இழப்புகளை தடுப்போம்.  தன்மானத்தை இழக்க மறுப்போம். பக்தர்கள் அடிமைகள் என்ற முத்திரைகளை ,நினைவுகளை, எதிர்பார்ப்புகளை  உடைப்போம்..    

Sunday, January 2, 2011

Test Blog

 

Delete this after published. Sample Contents.

நம்பிக்கைகளை அறிவால் அளப்போம்

 

 

நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் மானமில்‌‍லாதவர்கள்.

Saturday, January 1, 2011

Sample Blog in Tamil

 

 

மாதிரி படிவம். 1582. Sample post. வைத்தியலிங்கம்.